டெல்லி:
வக்கீல்களுக்கு 14 சதவீதம் சேவை வரி விதிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2016&17ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தார்.
இதில், வக்கீல்கள் சேவை வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
ஒரு வக்கீலிடம் மூத்த வக்கீலாகவோ, அல்லது கூட்டாண்மை மூலமோ சட்ட சேவை புரிவோர் மற்றும் நடுவர் தீர்ப்பாயத்தில் பிரதிநிதித்துவம் பெற்றவர்களுக்கு சேவை வரி விதிக்கப்படும்.
இதன் மூலம் 14 சதவீத சேவை வரியை அவர்கள் செலுத்த வேண்டும். இந்த திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.