மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற, ‘ஜோசப்’ திரைப்படம், தமிழில் ரீமேக் செய்யப்பட்டு, ‘விசித்திரன்’ என்ற பெயரில் வெளியாகி, ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
‘ஜோசப் படத்தை இயக்கிய பத்மகுமார், ‘விசித்திரன்’ படத்தையும் இயக்கினார். ஆனால், மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் நடித்த கதாபாத்திரத்தில், தமிழில் ஆர்.கே. சுரேஷ் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஒரிஜினல் விசித்திரன், ஜோஜூ ஜார்ஜ் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
அவர் கார் பந்தயத்தில் மிக விருப்பம் உள்ளவர். அவ்வப்போது கார் பந்தியங்களில் கலந்துகொள்வார்.
சமீபத்தில் அப்படி ஒரு கார் பந்தயத்தில் கலந்துகொண்ட ஜோஜூ ஜார்ஜ், அந்த காட்சியை சமூகவலைதளங்களில் பதிவிட்டார்.
அது சர்ச்சையாகி இருக்கிறது.
கேரளாவின் வாகமண் பகுதியிலுள்ள எஸ்டேட் ஒன்றில்தான், தனது விலையுயர்ந்த ஜீப் ரேங்லர் காரில் ஜோஜு ஜார்ஜ் கார் பந்தயத்தில் ஈடுபட்டார்.
‘பந்தயம் நடந்த இடம், விவசாயம் செய்ய மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள பகுதி. அங்கு கார் பந்தியம் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது’ என்று தெரிவித்த காவல்துறையினர் ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
ஜோஜூ ஜார்ஜ், ‘ஜெகமே தந்திரம்’ படத்தின் மூலம், தமிழில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.