சென்னை: திமுக அரசின் ஓராண்டு சாதனையான கடந்த 12 மாத சாதனை குறித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறை தயாரித்த 12 புத்தகங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
திமுக அரசின் ஓராண்டு நிறைவுபெற்றதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோபாலபுரம் சென்று மறைந்த முன்னாள் முதல்வரும், அவரது தந்தையுமான கருணாநிதி உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து, தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றவர், மெரினா கடற்கரை சென்று அண்ணா, கருணாநிதி நினைவிடங்களிலும் மரியாதை செலுத்தினர்.
பின்னர் தலைமைச்செயலகம் வந்தனர், திமுக அரசின் ஓராண்டு சாதனைகளை விளக்கும் 12 புத்தகங்களை வெளியிட்டார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ‘ஓயா உழைப்பின் ஓராண்டு – கடைக்கோடித் தமிழரின் கனவுகளைத் தாங்கி’ என்ற காலப்பேழை புத்தகத்தையும் ‘ஓயா உழைப்பின் ஓராண்டு – நிறைவான வளர்ச்சியில் நிலையான பயணம்’ என்ற ஓராண்டு சாதனை மலரையும் வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சாமிநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு, செய்தி மக்கள் தொடர்புத் துறை செயலாளர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.