திருச்சி:
ணிகர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் இன்று நடைபெறும் தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.

தமிழகத்தில், இன்று வணிகர் தினம் கொண்டாடப்படுவதால் மளிகைக் கடைகள், டீக் கடைகள் மூடப்படும்; ஹோட்டல்களுக்கு காலை மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் மே 5ம் தேதியை வணிகர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதை முன்னிட்டு, தமிழக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருச்சியில் இன்று, தமிழக வணிகர் விடியல் மாநாடு நடக்கிறது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.