புதுடெல்லி:
மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவங்குகிறது.
இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார்.
ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நடக்க உள்ள இந்த மாநாட்டில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்கள், நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, நீதித்துறை காலி ப்நியிடங்க்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கருத்துகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி. ரமணா, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.