சென்னை: கோயில் தேரோட்ட வீதிகளில் மேலே செல்லும் மின் கம்பிகள் இனி புதைவட மின்கம்பியாக மாற்றப்படும் என சட்டப்பேரவையில்  அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ஞ்சாவூர் மாவட்டம் களிமேடு கிராமத்தில் வீதியுலாவின்போது, உயரழுத்த மின்கம்பியில் தேர் உரசியதால் மின்சாரம் தாக்கி 3 சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கு தேர் மேலே சென்ற மின்கம்பியில் உரசியதே காரணம் என கூறப்பட்டது. இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய  மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார் , “இனி வரும் காலங்களில் தேரோட்ட வீதிகளில் உள்ள மின் இணைப்புகள் புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படும். ஏற்கெனவே, திருவாரூர் உள்ளிட்ட 3 கோயில்களின் தேரோடும் வீதிகளில் மின் இணைப்பை புதைவடமாக மாற்றும் பணி நடக்கிறது. தேரோட்டம் நடைபெறும் கோயிலின் தேர் வீதிகளில் மின் இணைப்பு புதைவடத்தில் கொண்டு செல்லப்படும்” என்று அவர் கூறினார்.