சென்னை: திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது மற்றும் பத்திரிகையாளர்களுக்கு ணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று செய்தி மற்றும் விளம்பரத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பதில் அளித்த அமைச்சர் சாமிநாதன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி ஒவ்வொரு ஆண்டும், தமிழ்த்துறையில் சிறந்து விளங்கும் திரையுலகினருக்கு ‘கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் . இந்த விருது, கலைஞர் பிறந்தநாளான ஜூன்-3 ஆம் தேதி விருது வழங்கப்படும். இந்த விருதுடன் நினைவு பரிசும், ரூ.10 லட்சமும் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும்.
பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும்.
பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்றும்,
பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு கூறினார்.