சென்னை: திருட முடியாத ஒரு சொத்து கல்வி மட்டும்தான் அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்யும் திட்டம் மற்றும் நம் பள்ளி நம் பெருமை என்ற பெயரில் விழிப்புணர்வு பரப்புரை வாகனத்தையும் தொடங்கி வைத்து உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

சென்னை கடற்கரையில் உள்ள லேடி வெல்லிங்டன் பள்ளியில் இன்று  பள்ளி மேலாண்மை குழுக்களை மறுகட்டமைப்பு செய்வதற்கான ‘நம் பள்ளி நம் பெருமை’ திட்டத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து  பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ‘நம் பள்ளி நம் பெருமை’ என பிரசார வாகனங்களையும் முதல்வர் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து, நிகழ்ச்சயில் முதல்வர் மு.க. ஸ்டாலின் , “ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது ஏழு தலைமுறைகளுக்குப் பாதுகாப்பாக அமையும். உங்களிடமிருந்து அதை யாராலும் பிரிக்க முடியாது. “பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதில் இந்திய துணை கண்டத்திற்கே தமிழ்நாடு முன்னோடியாக விளங்குகிறது . யாராலும் திருட முடியாத சொத்து கல்வி மட்டுமே. பள்ளிப்பருவம் என்பது திரும்ப கிடைக்காத மகிழ்ச்சியான காலம். குழந்தைகளின் கல்வி என்பது சமுதாயத்தின் அடித்தளம் . சமுதாய முன்னேற்றத்தின் திறவுகோல்.  எனவே குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்ட வேண்டும் என்று கூறியவர், பெற்றோர்கள் தங்களது  கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க வேண்டாம் என்றும் கூறினார்.

மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களின் சிந்தனை ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் அப்போது தான் சிறப்பாக செயல்பட முடியும்.குழந்தைகளின் கனவுகளுக்கு பெற்றோர்கள் தடையாக இருக்கக்கூடாது” என்று கேட்டுக்கொண்டதுடன்,  பள்ளிக்கல்வித்துறைக்கு தமிழக அரசு  ரூ.36895 கோடி நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது . பள்ளியின் தேவைகள் என்னென்ன என்பதை அறிந்து மேலாண்மை குழுக்கள் செயல்பட வேண்டும். மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க மேலாண்மை பொருட்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.