புதுடெல்லி:
ட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்களில் பங்கேற்ற உறுப்பினர்களில் திமுக எம்.பி., முதலிடம் பிடித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா அதிகமான விவாதங்களில் பங்கேற்று இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த கூட்டத்தொடரில் எம்.பிக்களின் செயல்பாடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தி.மு.க எம்.பிக்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகத் தெரியவருகிறது தி.மு.க சார்பில் கடந்தாண்டு மாநிலங்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எம்.அப்துல்லா 162 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். 49 கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இவரது வருகை 85% ஆகும். தி.மு.க மாநிலங்களவை எம்.பி கனிமொழி என்.வி.என்.சோமு 163 விவாதங்களில் பங்கேற்றுள்ளார். இதுவரை 87 கேள்விகளை முன்வைத்துள்ளார். இந்தக் கூட்டத்தொடரில் இவரது வருகை 74% ஆகும்.

தி.மு.க எம்.பி திருச்சி சிவா இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 96% வருகை புரிந்துள்ளார். பி.வில்சன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.