டெல்லி: லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டு உள்ளார். ராணுவத்தில் பொறியாளராக இருந்த ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இந்திய ராணுவத்தின் அடுத்த தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே, கார்ப்ஸ் ஆஃப் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் இருந்து ராணுவத் தளபதி ஆன முதல் அதிகாரி ஆவார். பொறியாளர் ஒருவர் இந்திய ராணுவ தளபதியாவது இதுவே முதன்முறை மனோஜ் பாண்டே கிழக்கு பிரிவு மற்றும் அந்தமான் நிக்கோபார் பிரிவு தளபதியாக பணியாற்றியவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]