மதுரை:
மதுரை சித்திரைத் திரு விழாவின் 11-வது நாளான இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாண மண்டபத்தில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி-அம்மனின் மணக்கோல காட்சியை தரிசித்தனர்.
இந்நிலையில் சித்திரைத்திருவிழாவின் 11-ஆவது நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. நாளை காலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெற உள்ளதையொட்டி தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு நேற்று மாலை புறப்பட்டார்.
திருத்தேரோட்டத்தின் போது கீழமாசி வீதியில் உள்ள தேரடிக்கு மீனாட்சி – சுந்தரேஸ்வரர் பிரியாவிடை அம்மனும் எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. மதுரை மாசி வீதிகளில் குவிந்த மக்கள் வெள்ளம் போன்று குவிந்து இருந்து சாமி தரிசனம் செய்யதனர்.