அருள்மிகு செஞ்சடையப்பர் திருக்கோயில், தஞ்சாவூர் மாவட்டம். திருப்பனந்தாள் என்ற ஊரில் அமைந்துள்ளது.
தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருப்பனந்தாள் பழம்பெரும் பதி. திருப்பனந்தாளில் குமரகுருபரர் காசிமடத்தை நிறுவினார். திருப்பனந்தாள் மடம் சைவ சமய மடங்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும்.
கி.பி.9-ஆம் நூற்றாண்டு கால பழமையான இந்த கோயிலில் ஆறுகால பூஜை நடைபெறுவதுடன், சித்திரை திருக்கல்யாணம், ஆடிப்பூரம், நவராத்திரி, சிவராத்திரி போன்ற திருவிழாகளும் சிறப்பாக கொண்டாப்படுகிறது.