சென்னை: தமிழகத்தில் 60நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று இரவு முதல் அமலுக்கு வருகிறது. மீன்களில் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு இந்த தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கடலில் மீன் வளத்தை பெருக்கவும், பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப் படுத்தும் சட்டத்தின் படி மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்படுகிறது இதன்படி மீன்பிடி தடைகாலம் நாளை முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் அமலுக்கு வருகிறது.. இதையொட்டி தமிழகத்தில் கிழக்கு கடலோர பகுதியில் திருவள்ளூர் முதல் கன்னியாகுமரி வரை இந்த தடை காலம் அமலில் இருக்கும். இந்த நாட்களில் விசைப்படகுகள், இழுவை படகுகள் மூலம் மீன் பிடிக்க அனுமதி கிடையாது. நாட்டு படகுகளில் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லலாம்.
இதுவரை பல ஆண்டுகளாக மீன்பிடி தடைக்கலம் 45 நாட்களாக இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு (2021) முதல், 45நாள் தடைகாலம் 61 நாட்களாக நீட்டிக்கப்பட்டு உள்ளது. மீன்பிடி தடை காலம் நாளை முதல் அமலுக்கு வருவதால் மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.