500 ஆண்டுகள் பழமையான அருள்மலை கிருபாகர சுப்ரமணியசுவாமி கோயில், ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
அருள்மலை எனப்படும் தோரணவாவி முருகன் கோயில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைந்துள்ளது. அறுபது படிகள் காணப்படுகின்றன. இந்த படிகள் 1957-இல் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிச்சுற்றில் காசிவிசுவநாதர் சன்னதி அமைந்துள்ளது.
இதுமட்டுமின்றி விநாயகர், இடும்பன், கன்னிமார், காலபைரவர், சனீஸ்வரர் ஆகிய திருவுருவங்கள் தனித்தனி சன்னதியில் அமைந்துள்ளன.
இந்த கோயிலில் வைகாசி விசாகம், கந்த சஷ்டி விழா, பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.