டெல்லி: பாலியல் வழக்கில்  சுசில்ஹரி பள்ளி தாளார் சிவசங்கர் பாபாவுக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடுத்த கேளம்பாக்கம் பகுதியில் செயல்பட்டு வரும் சுஷில்ஹரி பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது அங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலர் பாலியல் புகார் கூறியிருந்தனர். இதையடுத்து, அவர்மீது அடுத்தடுத்து 8 வழக்குகளை பதிவு செய்த காவல்துறையினர், அவரை சிறையில் அடைத்தனர். அவருக்கு ஜாமினும் மறுக்கப்பட்டு வந்தது.

வயது முதிர்வு காரணமாக, அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததை குறிப்பிட்டு ஜாமின் கோரியும் தமிழகஅரசு அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர் தொடர்ந்து சிறையிலேயே இருந்து வந்தார்.

இதையடுத்து, அவரது சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அவரது மனுவில், சிவசங்கர்பாபாவுக்கு ஏற்கனவே  இதய கோளாறு உள்பட பல உபாதைகள்  இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுமீதான விசாரணையின்போது, பாபா வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில், சிவசங்கர் பாபாவிற்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவசங்கர் பாபாவிற்கு எதிராக எட்டு வழக்குகள் உள்ள நிலையிலும்,சிவசங்கர் நிலையிலும் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அதன்படி சிவசங்கர் பாபா, பாலியல் வழக்கில் தொடர்புடைய பள்ளி வளாகத்துக்குள் நுழையக் கூடாது எனவும், புகார் கொடுத்தவர்களை சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் தொந்தரவு செய்யக்கூடாது, குறிப்பாக சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என எச்சரித்துள்ளது.