சென்னை: தமிழ்நாட்டில் மின்துறை சீர்திருத்தத்திற்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்லிக்கு பயணம் சென்றிருந்தார். அப்போது, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து, தமிழகத்திற்கான நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக மின்துறை சீரமைப்பு பணிகளுக்காக ரூ.7,054 கோடி ஒதுக்கீடு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. நடப்பு நிதியாண்டில் தமிழ்நாடு, ஆந்திரா, உத்தர பிரதேசம், அசாம், ஒடிசா, சிக்கிம் உள்ளிட்ட 10  மாநிலங்களுக்கு ரூ.28,204 கோடி நிதியை ஒட்டுமொத்தமாக ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்து உள்ளது.