சென்னை: கிண்டி அருகே உள்ள நந்தம்பாக்கம் மெயின்ரோட்டில், வேகமாக வந்த ஆட்டோவை குறுக்கே சென்று நிறுத்த முயன்ற காவலரை, வேகமாக வந்த ஆட்டோ இடித்து தள்ளிவிட்டு சென்றது. இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளால், அதை கட்டுப்படுத்த காவல்துறையி தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன்படி, வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதுபோல, கிண்டி போரூருக்கு இடையே நந்தம் பாக்கம் பகுதியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் வேகமாக வந்த ஆட்டோவை, அங்கு பணியில் இருந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் குறுக்கே சென்று நிறுத்தும் வகையில் சைகை காட்டினார். அதற்குள் அந்த ஆட்டோ சப்-இன்ஸ்பெக்டரை மோதி தள்ளிவிட்டு சென்றது. இது பரபரப்பை ஏற்படுத்தியது.
காயமடைந்த எஸ்.ஐ. பொன்ராஜ், அருகே இருந்த காவலர்களால் மீட்கப்பட்டு, உடனே அருகே உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இன்ஸ்பெக்டர் மீது மோதிய ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.