டெல்லி: இந்தியாவின் 18 யூடியூப் சேனல்கள் உள்பட 22 யூடியூப் சேனல்களை தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் முடக்கி உள்ளது.
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல் பரப்பிவருவதால் பாகிஸ்தானை சேர்ந்த யூடியூப் சேனல்கள் மற்றும் இந்தியாவின் 18 யூடியூப் சேனல்களை முடக்கி மத்திய தகவல் ஒளிரபப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளமும் முடக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஜனவரியில், டிஜிட்டல் மீடியா மூலம் ஒருங்கிணைந்த முறையில் இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்ட 35 யூடியூப் அடிப்படையிலான செய்தி சேனல்கள் மற்றும் இரண்டு இணையதளங்களைத் தடுக்க அமைச்சகம் உத்தரவிட்டது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021 இன் அவசரகால விதிகளின் கீழ் தற்போது 22 யூடியூப் சேனர்கள் முடக்கப்பட்டு இருப்பதாகவும், இந்திய புலனாய்வு அமைப்புகள் இந்த சமூக ஊடக கணக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன என்று ஐ&பி செயலாளர் அபூர்வ சந்திரா கூறினார்.