டெல்லி: நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க மறுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மக்களைவியில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆவேசமாக பேசினார். அதைத்தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். ராஜ்யசபா எதிர்க்கட்சியினரின் அமளியால் மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும், நீட் விலக்கு கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்காமலும், மத்தியஅரசுக்கு அனுப்பாமலும் இழுத்தடித்து வருகிறார். தமிழக அரசு இயற்றிய 19 சட்டங்கள் ஆளுநர், குடியரசுத் தலைவர் ஒப்புதல் இல்லாமல் முடங்கி உள்ளது.
இந்த நிலையில், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த திமுகவின் மக்களவை எம்.பி டி.ஆர்.பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.
அப்போது அவைத்தலைவர் நீட் விலக்கு குறித்து பேச அனுமதி மறுத்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. அவைத்தலைவர் நடவடிக்கையை கண்டித்தும், நீட் விலக்கு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பாத தமிழக ஆளுநரை கண்டித்து மக்களவையில் இருந்து திமுக வெளிநடப்பு செய்தது.
இதற்கிடையில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் ராஜ்யசபா மதியம் வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்பி கே சுரேஷ், கேரளாவில் நிதிச் சொத்துக்களைப் பத்திரப்படுத்துதல் மற்றும் மறுகட்டமைத்தல் மற்றும் செக்யூரிட்டி வட்டிச் சட்டம், 2002 (SARFAESI சட்டம்) ஆகியவற்றின் “மிருகத்தனமான மற்றும் இதயமற்ற அமலாக்கம்” பற்றி விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கினார்.
திமுக கவன ஈர்ப்பு நோட்டீஸ் – பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இன்றைய மக்களவை அமர்வு