சென்னை

ர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையைத் தினசரி மாற்றி அமைக்கின்றன.   ஐந்து மாநில சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கடந்த 8 நாட்களாகவே பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டு வருகிறது.. இன்றும் 9வது நாளாக பெட்ரோல் 75 காசுகள் அதிகரித்து ரூ.106.69, டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து ரூ.96.76க்கு விற்பனை செய்யப்படுகிறது… வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர்,

தற்போது சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது.  ஆயினும் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றப்பட்டுள்ளது.  இதனால் பொதுமக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.  இதையொட்டி ஏப்ரல் 2-ம் தேதி மாவட்ட  தலைநகரங்களிலும், ஏப்ரல் 7-ம் தேதி மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தக் காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.