கிவ்

ஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இந்த வாரம் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது,

ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக போர் நடந்து வருகிறது.    ரஷ்யப் படைகள்  தாக்குதலால் உக்ரைன் நாட்டின் விமான நிலையங்கள் நொறுக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டுக்கு யாரும் செல்ல முடியாத நிலை மற்றும் நாட்டை விட்டு வெளியேறா முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த போரையொட்டி ரஷ்யாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பொருளாதாரத்தடை விதித்துள்ளன.  இதனால் ரஷ்யாவில் வர்த்தகம் பெரிதும் முடங்கி வருகிறது.  உக்ரைன் மற்றும் ரஷ்ய அதிகாரிகள் இதுவரை நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.  

இந்நிலையில் ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிகாரிகள் அடுத்த கட்ட பேச்சு வார்த்தை துருக்கியில் நடத்தப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த வாரத்தில் பேச்சு வார்த்தை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது.   ஆனால் தேதி மற்றும் நேரம் குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை.