சென்னை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வரும் அமைச்சர் பிடிஆர், பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார் பிடிஆர் வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருவதாக கூறினார்.
2022-2023-ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. . இடைக்கால பட்ஜெட்டை போலவே இதுவும் காகிதம் இல்லா பட்ஜெட்டாகவே தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் பட்ஜெட்டை காலை 10 மணி முதல் தாக்கல் செய்து வருகிறார். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும் அதிமுக எம்எல்ஏக்கள் திமுக அரசை கண்டித்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். பின்னட் பட்ஜெட்டை புறக்கணித்து அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அமளிக்கு இடையிலும் பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்து பேசி வருகிறார்.
தமிழர் மரபு, பண்பாடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது திமுக ஆட்சிக்கு வந்த பின் நான் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது அறிவிக்கப்பட்ட பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டு உள்ளது வரலாறு காணாத வேகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வருகிறது.
சிறந்த நிதி நிர்வாகத்தை திமுக அரசு கடைபிடித்து வருகிறது. பதவியேற்ற முதல் நாளிலேயே 5 தேர்தல் வாக்குறுதிகளை முதலமைச்சர் நிறைவேற்றினார் மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒரு தொலைநோக்கு திட்டத்தை முதலமைச்சர் உருவாக்கியுள்ளார்.
வருவாய் பற்றாக்குறை அச்சுறுத்திய நிலை மாற்றப்பட்டுள்ளது.
ஒன்றிய, மாநில நிதி உறவுகளை வழிநடத்த சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.