9 ஆண்டு இடைவெளிக்குப் பின் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான ‘பயணி’ இசை ஆல்பம் இன்று வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த பாடல் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

விவேகா எழுதியுள்ள பாடலுக்கு அங்கித் திவாரி இசையமைத்திருக்கிறார்.
ஐஸ்வர்யா இதற்கு முன் இயக்கிய 3, வை ராஜா வை ஆகிய திரைப்படங்களில் ஐஸ்வர்யா ஆர். தனுஷ் என்று தனது பெயரை குறிப்பிட்டிருந்தார்.
பயணி வீடியோ ஆல்பத்தில் இயக்கம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இந்த புதிய இசை ஆல்பம் முயற்சிக்கு மோகன்லால், சிரஞ்சீவி, அல்லு அர்ஜுன், துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel