க்ரைனில் 5வது நாளை போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் உருவாக்கப்பட்ட, நாட்டின் கனவு விமான ஏஎன்-225 மிரியா  என்ற உலகின் மிகப்பெரிய சரக்கு விமானத்தை ரஷ்யா படை எரித்து நாசமாக்கி உள்ளது. இது உக்ரைன் மக்கள் மட்டுமின்றி உலக நாட்டு மக்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய சரக்கு விமானம் உக்ரைனில் உருவாக்கப்பட்டிருந்தது. இது உக்ரைனின் கனவு விமானம் என்று கூறப்படுகிறது. தலைநகர் கீவ் அருகே உள்ள Hostomel  விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த விமானம் நேற்று ரஷ்ய துருப்புக்களால் போரிட்டு அழிக்கப்பட்டது. இதை உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா டிவிட் மூலம் தெரியப்படுத்தி உள்ளது.

தலைநகர் கீவ் அருகே உள்ள ஹோஸ்டோமல் விமான நிலையத்தில் ரஷ்யா ஷேல் தாக்குதல் நடத்தியது.  அப்போது, அங்கிருந்த AN-225 ‘Mriya’ என்ற மிகப்பெரிய உக்ரைனிய சரக்கு விமானத்தை எரித்து நாசமாக்கியது. உக்ரேனிய வானூர்தி நிறுவனமான அன்டோனோவ் தயாரித்த இந்த விமானம், உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமாக தகுதியை பெற்றது.

மேலும், விமானத்தை அழித்திருந்தாலும், வலுவான, சுதந்திரமான மற்றும் ஜனநாயக உக்ரைன் அரசு உருவாவதை அவர்களால் ஒருபோதும் அழிக்க முடியாது என பதிவிட்டுள்ளார்.