சிவனடியாருக்கும் சிவ பக்தருக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?
இவ்விரண்டுமே ஒன்றுபோலத்தான் தெரியும். ஆனால் சிவ பக்தனுக்கும் சிவனடியாருக்கும் சில வேறுபாடுகள் உள்ளன என்பதை உணர்ந்ததுண்டா?
1)🙇சிவனைக் கண்டதும் பணிபவன் பக்தன்.
❤️ சிவனுக்காக எதையும் செய்யத் துணிந்தவன் அடியார்.
2)🙇சிவனை வணங்குபவர் பக்தன்.
❤️சிவனை மட்டும் வணங்குபவர் அடியார்.
3)🙇உடல் தூய்மையாக இருந்தால் மட்டுமே கோயிலுக்குச் செல்பவர் பக்தன்.
❤️உடலை ஒரு பொருட்டாகக் கருதாமல், மனத்தூய்மை வேண்டி கோயிலுக்குச் செல்பவர் அடியார்.
4)🙇அர்ச்சனை செய்வதற்காகக் கோயில் செல்பவர் பக்தன்.
❤️ஈசனைப் போற்றிப் பாடி ஆனந்தமடையக் கோயில் செல்பவர் அடியார்.
5)🙇அறமல்ல சிவம் என்று உணராதவர் பக்தன்.
❤️அன்பே சிவமென உணர்ந்தவர் அடியார்.
6)🙇மறைக்குள்ளும் முறைக்குள்ளும் இருப்பவர் ஈசன் என்று நினைப்பவர் பக்தன்.
❤️ஈசனை அடைய மனமும் மொழியும் தடையில்லை, ஆக மறையும் முறையும் எமக்கில்லை என்று நினைப்பவர் அடியார்.
7)🙇கூட்டத்தோடு கூட்டமாக முண்டியடித்து இறைவனைக் காண்பவர் பக்தன். .
❤️கூட்டம் போனபின் ஈசன் அழகைத் தனித்து நின்று ரசிப்பவர் அடியார்.
8) 🙇ஈசனை அடையச் சுத்தமாக இருக்கவேண்டும் என நினைப்பவர் பக்தன்.
❤️சுத்தத்தைப் பெரிதாக எண்ணாமல் சித்தத்தை சிவன்பால் வைப்பவர் அடியார்.
9) 🙇வாழ்வில் ஒரு பகுதியை வழிபாட்டுக்குச் செலவு செய்பவர் பக்தன்..
❤️வாழ்வையே வழிபாடாகக் கொண்டவர் அடியார்.
சிவபக்தனாக இருப்பதைவிடச் சிவனடியாராக இருப்பது மிக மிகச் சுலபம்.
சிவபக்தனுக்கு மறுபிறவி நிச்சயம். சிவனடியார்க்கு முக்தி நிச்சயம்…
தென்னாடுடைய சிவனே போற்றி!