சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, அமைச்சர்கள் நேரு, அன்பில்மகேஷ், ரகுபதி மற்றும் சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி, உள்துறை அமைச்சர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிபட பல அதிகாரிகள் தங்களது வாக்குகளை செலுத்தினார்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியதும், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மொத்தமுள்ள 200 வார்டுகளிலும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களது ஜனநாயக கடமையைற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி தில்லைநகரில் கே.என்.நேரு, கிராப்பட்டியில் அன்பில்மகேஷ் தனது தாயாருடன் வந்து வாக்களித்தார்., புதுக்கோட்டையில் ரகுபதி தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னையில் டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை அமைச்சர் பிரபாகர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார்.