
ஹிட் படங்கள் எல்லாம் “பார்ட் – 2” வருகிறதே என்கிற ஆசையில் தனது “சண்டக்கோழி” படத்தின் அடுத்த பாகத்தை எடுக்கலாம் என்று ஆசைப்பட்டார் விஷால். முந்தைய ச.கோ.வை இயக்கிய லிங்குவையே அணுகினார்.
அவரும், தானே இயக்குகிறேன் என்றதோடு தயாரிப்பையும் தானே செய்கிறேன் என்றார்.
ஆனால் ஏற்கெனவே லிங்குவின் தயாரிப்பில் வெளியான உத்தம வில்லன் தோல்வி அடைய, அதனால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அவரது இன்னொரு தயாரிப்பான ரஜினி முருகன் ரிலீஸ் ஆவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து படத்தை தான் தயாரிப்பதாக கூறினார் விஷால். இதற்கு லிங்குவும் ஒப்புக்கொண்டார். விஷால் கொடுத்த அட்வான்ஸையும் பெற்றுக்கொண்டார். கதை விவாதமும் நடந்துகொண்டிருந்தது.
இதற்கிடையில், ரஜினிமுருகன் படத்தை ரிலீஸ் செய்தார் லிங்கு. படமும் வெற்றி அடைய, கடன் பிரச்சினையில் இருந்து வெளியே வந்தார். அதோடு, விஷாலையும் மறந்தார். சண்டைக்கோழி இரண்டாம் பாக டிஸ்கஷனை விட்டு விட்டு தெலுங்கு படம் ஒன்றை படத்தை இயக்க கிளம்பிவிட்டார்.
இதனால்தான் சண்டக்கோழி இரண்டாம் பாகத்தை ட்ராப் செய்வதாக ட்விட்டரில் எழுதினார் விஷால். அதோடு, “திரைப்பட படைப்பாளிகள் சிலர் தங்கள் பணி மீது முழு கவனம் வைப்பதில்லை. இதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. ” என்று லிங்குசாமிக்கு அட்வைஸூம் செய்திருக்கிறார்.
ஆக, மீண்டும் சண்டக்கோழியாக அடித்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் விஷாலும், லிங்குவும்!
Patrikai.com official YouTube Channel