டெல்லி: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதனப்டி, 2020 டிசம்பர், 2021 ஜூன் நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை (NTA) விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (UGC NET) 2021 தேர்வுகள் 20, 21, 22, 24, 25, 26, 29, 30 நவம்பர் மற்றும் 01, 03, 04 மற்றும் 05 டிசம்பர் 2021 ஆகிய தேதிகளில் வெவ்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதற்கிடையில், கோவிட்-19 தோற்று மற்றும் ஜவாத் சூறாவளி காரணமாக UGC NET 2021 இன் சில தேர்வுகள் கடந்த மாதம் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் நடத்தப்பட்டன.  யுஜிசி நெட் முடிவு ஜனவரி 30, 2022-க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த தேர்வுகளில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுக்காக (UGC NET Result) நீண்ட நாட்களாகக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், பல்கலைக்கழக மானிய குழு அறிக்கைகளின்படி,  அடுத்த வாரத்தில் யுஜிசி நெட் முடிவை NTA அறிவிக்கலாம். இதற்கு முன், முடிவை வெளியிடும் தேதி மற்றும் நேரம் பற்றிய தகவலை தேசிய  தேர்வு வாரியம் விரைவில் வெளியிடும் என யுஜிசி மானிய குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

NTA ஆல் UGC NET முடிவுகள் வெளியிட்ட பிறகு, விண்ணப்பதாரர்கள் UGC NET இன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான ugcnet.nta.nic.in ஐப் பார்வையிட வேண்டும். முகப்புப் பக்கத்தில், ‘UGC NET 2021 RESULT’ என்ற இணைப்பைக் கிளிக் செய்து, உங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி அல்லது கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். அடுத்ததாக, UGC NET 2021 முடிவுகள் திரையில் திறக்கப்படும். நீங்கள் சரிபார்த்து பதிவிறக்கம் செய்யலாம். இது தவிர, கூடுதல் குறிப்புக்கு நீங்கள் ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கலாம்.

யுஜிசி நெட் முடிவுடன் என்டிஏ இறுதி ஆன்சர் கீ-யையும் வெளியிடும். தேர்வில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் சான்றிதழ்களும் ஆன்லைனிலேயே வழங்கப்படும். அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in-ஐ விண்ணப்பதாரர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

யுஜிசி நெட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும்/ அல்லது உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதற்கான தேர்வில் தகுதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.