டெல்லி: மணிப்பூர் மாநில சட்டமன்றத்தில் முதல்கட்ட தேர்தல் பிப்ரவரி 27ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதை 28ந்தேதிக்கு மாற்றியும், மார்ச் 3ந்தேதி நடைபெற இருந்த 2வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 5ந்தேதிக்கும் மாற்றிய  இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

60 தொகுதிகளைக்கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3-ம்தேதி ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறறும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தது.

இந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தேதியான பிப்ரவரி 27ந்தேதிக்கு பதிலாக அடுத்த நாள் பிப்ரவரி 28ந்தேதியும், 2வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3ந்தேதிக்கு பதில் 5ந்தேதியும்  நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தற்போதைய கள நிலவரம், கடந்த கால நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து தரவுகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 153-ன் கீழ், மணிப்பூர் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதிகளை மாற்றியமைக்க ஆணையம் முடிவு செய்ததாகவும், அதன்படி,  முதல் கட்ட தேர்தல் பிப்ரவரி 28, 2022 (திங்கட்கிழமை) அன்றும் இரண்டாம் கட்ட தேர்தல் மார்ச் 5, 2022 (சனிக்கிழமை) அன்றும் நடைபெறும் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவைக்கு முதல் கட்டமாக 38 தொகுதிகளில் அடுத்த மாதம் 28-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாவது கட்டமாக 22 தொகுதிகளுக்கு மார்ச் மூன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அங்கு மீண்டும்  இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி  தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியை கைப்பற்ற பாரதிய ஜனதா கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.