சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும்   இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடைபெற உள்ள 12,607 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்  21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன. இதில் சில வார்டு தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற வார்டுகளுக்கு தேர்தல் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெறுகிறது.  அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஏற்கனவே வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில  தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்தல் நடைபெற உள்ள 12,607 பதவிகளுக்கு 57,778 வேட்பாளர்கள் களத்தில் உள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநகராட்சி வார்டுகளுக்கு 11,196 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நகராட்சி வார்டுகளுக்கு 17,922 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேலும், பேரூராட்சி பதவிகளுக்கு 28,660 வேட்பாளர்கள் என மொத்தம் 57,778 வேட்பாளர்கள் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் களம் காணுகிறார்கள்.

சென்னை மாநகராட்சி தேர்தல் இறுதி வேட்பாளர்கள் பட்டியல்: 200 வார்டுகளில் 2,670 வேட்பாளர்கள் போட்டி…