சென்னை: ரேசன் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் உணவு பொருட்கள் தரமற்ற நிலையில், அதை உடனே திருப்பி அனுப்பலாம் என ரேசன் கடை ஊழியர்களுக்கு தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் வழங்கப்படும் உணவுபொருட்கள் தரமற்று உள்ளதாக ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே தமிழகஅரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிலும் தரமற்ற பொருட்கள் இருந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ரேஷன் கடைகளுக்கு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து வரும் உணவு பொருட்கள் தரமில்லை என்றால் திருப்பி அனுப்பலாம் என்று ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,  நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு வரும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை ரேசன் கடை ஊழியர்கள் உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைக்கு வரும் பொருட்கள் தரமாக இல்லை என்றால் ஊழியர்கள் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]