d
இலங்கை வடபகுதியில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாட்டை , நிர்வாகம் திரும்பப்பெற்றது.
சமீபத்தில், இலங்கை யாழ் பல்கலை நிர்வாகம், மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு குறித்து உத்தரவு ஒன்றை வெளியிட்டது. . ஜீன்ஸ், டீசர்ட் அணிந்து வரக்கூடாது, வெள்ளிக்கிழமைகளில் மாணவிகள் கட்டாயம் புடவை கட்டி வர வேண்டும், மாணவர்கள் தாடி வைக்கக்கூடாது என்று  அந்த உத்தரவில் இருந்தது.
இதற்கு, மாணவர்கள் தரப்பில் இருந்தும், பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.  இதையடுத்து, ஆடை மற்றும் தாடி கட்டுப்பாடு குறித்த அந்த உத்தரவை திரும்பப் பெறுவதாக பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

[youtube-feed feed=1]