டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.  75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாவட்டங்களில் 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

காதி சக்தி திட்டத்தின் கீழ் 100 புதிய சரக்குப் போக்குவரத்து முனையங்கள் ஏற்படுத்தப்படும் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 2 லட்சம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எல்லையோர கிராமங்கள், திறன்மிக்க கிராமங்களாக நவீன நுட்பத்துடன் தரம் உயர்த்தப்படும் என்றும், பின்தங்கிய மாவட்டங்களின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  மணிப்பூர், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு 15 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பேங்கிங்க், இண்டெர்நெட் பேங்கிங் போன்றவை அதிகமாக வளர்ந்துள்ளது. இந்த வசதிகள் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதை அரசு உறுதி செய்யும். 75 டிஜிட்டல் பேங்கிங் யூனிட்டுகள் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் 75 மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் இ-பேங்கிங் அறிமுகம், நாட்டில் 75 மாவட்டங்களில் பரிட்சார்த்த முயற்சியாக இ-பேங்கிங் அறிமுகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும், அதைத்தொடர்ந்து,  தபால் & வங்கிகள் இணைந்து செயல்பட புதிய திட்டம் வகுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தபால் அலுவலக கணக்கிலிருந்து வங்கி கணக்குக்கு ஆன்லைன் பணப்பரிமாற்றத்திற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன்,  தபால் துறையை, வங்கிகள் துறையோடு இணைந்து செயல்பட  ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் கூறப்பட்டு ள்ளது.

இ-பாஸ்போர்ட் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளதுடன், சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் திட்டம், வரும் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.