டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதிநிலை அறிக்கையை வாசித்து வருகிறார். இதில், இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு, காவேரி – பெண்ணாறு நதி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி, 400 புதிய ரயில்கள அறிமுகம் உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
பட்ஜெட்டை காலை 11மணி தாக்கல் செய்யத் தொடங்கிய நிதியமைச்சர், முதலில் கொரோனா பெருந்தொற்றில் உயிரிழந்த நபர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பூஜ்ஜிய பட்ஜெட் மற்றும் இயற்கை விவசாயம், நவீன விவசாயம் ஆகியவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விவசாயப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களைத் திருத்துவதற்கு மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும். எண்ணெய் வித்துகள், சிறு தானிய உற்பத்திக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை என்றும் உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரித்துள்ளதாகவும், ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மூன்று ஆண்டுகளில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் 400 ரயில்கள் அறிமுகம் செய்யப்படும் என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 22, 000 கி.மீ தூரத்திற்கு ரயில்பாதைகள் மேம்படுத்தப்படும். உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரயில் நிலையம் ஒரு உற்பத்தி பொருள் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ரயில் நிலையங்களையும், நகர்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரியளவில் திட்டம் வகுக்கப்படுட வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
கோதாவரி – காவேரி, காவேரி – பெண்ணாறு நதி இணைப்பு திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும. இந்தியாவில் 5 நதிகள் இணைப்பு திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ரூ. 44 ஆயிரம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அறிவிப்பு.