சென்னை:  நடப்பாண்டின் நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவுக்கு அனுமதி கோரி தமிழக எம்.பி.க்கள் கோஷமிட்டனர். இது அவையில்  சலசலப்பை ஏற்படுத்தியது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுதொடங்கி உள்ளது. முதல்நாள் கூட்டம் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கி உள்ளது. முன்னதாக குடியரசு தலைவர் உரையின்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த  திமுக, காங்கிரஸ் எம்.பி.க்கள் இடையூறு ஏற்படுத்தி கோஷமிட்டனர். அப்போது,  தமிழக  மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக திமுக எம்பிக்கள் மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். மேலும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இது  நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.