நாளை (27ஆம் தேதி ) வண்டலூரில் நடைபெற இருக்கும் பாமக மாநில மாநாட்டிற்கு, அக் கட்சியின் ஏ.கே. மூர்த்தி, தனது முகநூல் பக்கத்தில் சில வேண்டுகோள்கள் விடுத்துள்ளார்.
“தொண்டர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ள வேண்டுகோள்கள்:
- மாநாட்டிற்கு வரும் இளைஞர்கள், மாற்றம்-முன்னேற்றம்-அன்புமணி லோகோ அச்சிட்ட பனியன்களை அணிந்து வரவேண்டும். வீரப்பன் படம், அக்னி கலசம் போட்ட பனியன்களை மாநாட்டிற்கு வரும் போது அணிய வேண்டாம் என்று அனைவருக்கும் அறிவுறுத்தவும்.
2. மாநாட்டிற்கு வருபவர்கள் கடலூர்-புதுச்சேரி நகர் வழியாக திண்டிவனம் நெடுஞ்சாலையில் பயணிக்க முடிவெடுத்திருந்தால் வண்டிகளை புதுச்சேரியில் நிறுத்தாமல் தைலாபுரம் வந்து நிறுத்தி பின்னர் சென்னை நோக்கி வரவும்.
3. கண்டிப்பாக கிழக்கு கடற்கரை வழியாக வண்டலூருக்கு வர வேண்டாம். ஈ.சி.ஆர் வழியாக மாமல்லபுரம், சென்னை சென்று பார்த்துவிட்டு பின்னர் வண்டலூர் வரலாம் என்று திட்டமிட வேண்டாம்.
4. உணவுக்காகவோ அல்லது வேறு எதற்கும் வரும் வழியில் வண்டிகளை நிறுத்தும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும்.
5. அந்தந்தப் பகுதிகளில் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மாநாடு நடைபெறும் நாளான சனிக்கிழமை (27/02/2016) அன்று நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூடவேண்டும் என்பதற்கான கடிதங்களை சம்பந்தப்பட்ட டாஸ்மாக் அதிகாரிகளிடம் கொடுத்து டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்