சென்னை: புதிதாக தொடங்கப்பட்டுள்ள 2 சென்னை காவல்துறை ஆணையகரங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் ரோந்துப் பணிக்கு 20 வாகனங்கள் முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் காவல் ஆணையரகங்கள் நிர்வாக வசதிக்காக 3ஆக பிரிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, புறநகர் பகுதிகளுக்காக ஆவடி, தாம்பரம் பகுதிகளில் புதிய காவல் ஆணையரங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான காவல்ஆணையர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும், காவல்துறையின் ரோந்துப் பணிக்கு 106 வாகனங்கள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் முதற்படியாக, இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகங்களின் பயன்பாட்டிற்காக 20 வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.