சென்னை: சென்னையில் கூடுதல் ஆணையர் உள்பட மொத்தம் 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மட்டுமின்றி ஒமிக்ரான் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. மேலும், நேற்று மேலும்  12,895 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் வெளிநாட்டில் இருந்து 34 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து 18 பேர் வந்துள்ளனர்.   இதுவரை 28,00,286 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பட்சமாக சென்னையில், 6,186 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினருக்கும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் கூடுதல் ஆணையர் உள்பட 70 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும், , அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.