அரசு ஊழியர்கள் சபரிமலை செல்வதற்க்காக விரதம் என்ற பெயரில் தாடி வளர்த்தால் அவர்களது சம்பளத்தில் இதர படிகள் பிடித்தம் செய்யப்படும் என்று அறிவித்தது.
கேரளா அரசின் இந்த அறிவிப்பால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு மீதும் முதல்வர் பினராய் விஜயன் உள்ளிட்ட இடதுசாரிகள் மீது இந்துத்துவ அமைப்புகள் வெறுப்பை உமிழ்ந்து வருகின்றன.
இதுகுறித்து விளக்கமளித்த அதிகாரிகள், பாலக்காடு சரக தீயணைப்புத் துறை துணை அலுவலர் நவம்பர் மாதம் 30 ம் தேதி வெளியிட்ட இந்த சுற்றறிக்கையை பாலக்காடு சரக அதிகாரி தனது டிசம்பர் 9 ம் தேதியிட்டு உத்தரவில் ரத்து செய்திருக்கிறார்.
இருந்தபோதும், பாலக்காடு சரகத்தில் நடைபெற்ற சம்பவத்தை மாநிலம் முழுக்க உள்ள அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக வெளியான தவறான செய்தியை டிசம்பர் 10 ம் தேதி சமூக வலைதளத்தில் வலதுசாரி இந்து அமைப்பினர் பகிர்ந்துள்ளார்.
கேரளாவில் சபரிமலை சீசன் துவங்கியிருக்கும் நேரத்தில் இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்பி வெறுப்புணர்வை இவர்கள் தூண்டி வருகிறார்கள் என்றும் இது தவறான செய்தி என்றும் கூறினார்கள்.