திருப்பரங்குன்றம்

திமுக உறுப்பினரைத் தெருவில் போகும் நாய் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது உரை மூலம் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பி வருபவர் ஆவார்.  ஒரு பொதுக் கூட்டத்தில் ‘ஜெயலலிதா கொள்ளை அடித்ததை டிடிவி தினகரன் செலவு செய்கிறார்” எனப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது.   நேற்று முன் தினம் மதுரை திருப்பரங்குன்றத்தில் நடந்த அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டார்.

அந்த கூட்டத்தில் சீனிவாசன், “சமீபத்தில் நடந்த  அதிமுக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவரை விரட்டி விட்டார்கள் எனக் கூறுகின்றனர். பலர் அதிமுகவில் தகுதி படைத்தவர்களாக  உள்ளனர்.   ஆகவே தகுதியற்றவர்களுக்கு அதிமுகவில் இடம் இல்லை.

யார் வேண்டுமானாலும் அதிமுகவில் பதவிக்கும், தலைமை பொறுப்புக்கும் வரலாம் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு எடப்பாடி, ஓபிஎஸ் ஆவார்கள்.  அப்படி இருக்கத் தகுதியே இல்லாத ‘‘தெருவில் போகிற நாய்’’ நானும் தேர்தலில் நிற்பேன் என்றால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ஆகவே நம் தொண்டர்கள் அவர்களை விரட்டி விட்டனர்’’ என்றார்.

அதிமுக உறுப்பினரைத் தெருவில் போகும் நாய் என திண்டுக்கல் சீனிவாசன் குறிப்பிட்டது அக்கட்சியில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.