சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டு திட்டம் 2027 ஜனவரி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணியில் உள்ள ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு காப்பீடு திட்டம் அமலில் உள்ளது. மேலும், ரேஷன் அட்டைதாரர்களும்,  முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்  பயன்பெறும் வகையில் காப்பீடு திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த காப்பீடு திட்டத்தின்மூலம் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில்  51 வகையான நோய்களுக்கு ரூபாய் 5 லட்சம் வரையிலான உயர் மருத்துவ சிகிச்சையை மக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் 2008ஆம் வருடம் செப்டம்பர் மாதம் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா என்ற திட்டத்தின் இணைக்கப்பட்டு மத்திய மாநில அரசுகள் இரண்டும் இணைந்து தவணைத் தொகை பங்கிட்டு வழங்கி வருகின்றன.

இந்த  காப்பீட்டுத் திட்டமானது வரும் 20202ம் ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து, அதாவது  2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது,