உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் வசிக்கும் தனது மகனை அருகில் உள்ள கோவிலுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி சிறுவனிடம் 20 ரூபாயைக் கொடுத்து குற்றவாளி சிற்றின்பத்தில் ஈடுபட்டதாக அந்த சிறுவனின் தந்தை போலீசில் புகாரளித்தார்.
2016 ம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
2018 ம் ஆண்டு கீழமை நீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்பை எதிர்த்து அலஹாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனில் குமார் ஓஜா “குற்றவாளி சிறுவனிடம் தகாத முறையில் பாலியல் செய்கையில் ஈடுபட்டிருந்தாலும் முறையான உறுப்பில் வன்புணர்வு செய்யாததால் அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை போக்சோ சட்ட விதிகளின் படி தவறானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
10 வயது சிறுவனை பாலியல் சீண்டல் என்ற பெயரில் அவனது வாய் வழியாக வன்புணர்வு செய்து சிற்றின்பத்தை அனுபவித்த குற்றவாளிக்கு தவறான போக்சோ சட்ட விதிகளின் படி 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டதாகக் கூறி அவரது தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளார்.
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபரின் தண்டனை குறித்த அலஹாபாத் உயர்நீதி மன்றத்தின் இந்த பரபரப்பான தீர்ப்பு நாடு முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.