டெல்லி: வேளாண் சட்டத்துக்குஎதிராக ராஜ்யசபாவில் குரல் கொடுத்து சஸ்பெண்ட் ஆன 9 எம்.பிக்களில் ஒருவரான காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சட்டவா தற்போது உயிரோடு இல்லை. ஒருவேளை அவர் தற்போது உயிரோடு இருந்திருந்தால், வேளாண் சட்டத்தை மோடி வாபஸ் பெற்றது குறித்து, தனது கருத்தை மீண்டும் பதிவு செய்திருப்பார்.

மோடி தலைமையிலான மத்திய பாஜக கூட்டணி அரசு, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தப்போவதாக அறிவித்து மூன்று வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. அந்த 3 சட்டங்களும் 2020ம் ஆண்டு செப்டம்பர் 19ந்தேதி இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்டம் குறித்து ராஜ்யசபாவில் நடைபெற்ற விவாதத்தின்போது, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் அவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இதனால் காரணமாக 9 எம்பிக்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.அவர்களில் ஒருவர் ராஜீவ் சட்டவா. இவர் சமீபத்தில் காலமாகி விட்டார்.
இந்த நிலையில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. இதனால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் மீதான இடைநீக்கமும் ரத்தாகும். அதனால் மற்ற 8 எம்.பி.க்கள் ராஜ்யசபா திரும்புவார்கள். ஆனால், ராஜீவ் சட்டவா விண்ணுலகில் இருந்து புன்னகைப்பார்.