டெல்லி: ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என உத்தரவிட்ட மும்பை நீதிமன்ற பெண் நீதிபதியின் தீர்ப்பை உச்சநீதி மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. ஆடையின் மேலே தொடுவதும் பாலியம் குற்றம் என்று தீர்ப்பளித்துள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறிப்பாக, சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்பட்டும் பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுபோல பள்ளிகளிலம் பாலியல் அத்துமீறல்கள் அதிகரித்துள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மும்பை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி புஷ்பா கனேடிவாலா என்பவர், 12 வயதுச் சிறுமியின் ஆடைகளைக் களையாமல், அந்தச் சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பதும், தொடுவதும் பாலியல் துன்புறுத்தலில் சேராது என்றும், அந்த செயலில் ஈடுபட்டதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. அந்தச் சிறுமியின் மேல் ஆடைக்குள் கையை நுழைத்தாலும் அது பாலியல் வன்கொடுமையில் வராது. பாலியல் வன்கொடுமை என்பது, ஆடைகள் இன்றி, உடலோடு உடல் தொடர்பு கொள்வதுதான். ஆதலால் அந்தச் சிறுமியின் மேல் ஆடையை அகற்றாமல் தொட்டதால் அது பாலியல் வன்கொடுமை என்று கூற முடியாது. இது போக்சோ சட்டத்திலும் வராது. ஐபிசி 354-வது பிரிவில் மட்டுமே வரும் என்று கூறி பாலியல் சேட்டை செய்த நபரைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பளித்து விடுவித்தார்.
மும்பை உயர்நீதிமன்ற பெண் நீதிபதியின் இந்த தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கியது. சட்ட நிபுணர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த தீர்ப்பை எதிர்த்து தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. லைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி. ராமசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட அமர்வி விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அப்போது, அப்போது, ஆடைக்கு மேல் தொடுவது பாலியல் வன்கொடுமை இல்லை என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்தும், . குற்றவாளிகளை சட்டத்தின் வலையில் இருந்து தப்ப அனுமதிக்கும் வகையில் சட்டம் இருக்க முடியாது என்று கூறியதுடன், மேலாடையை நீக்கமால் தொடுவதும் பாலியல் வன்முறை (Sexual Assault) தான் எனவும் அது போன்ற வழக்குகளை போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் எனவும் தீர்ப்பு அளித்தனர்.