ஜெய்ப்பூர்:
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது.
165 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற போட்டி கணக்கில் இந்திய முன்னிலையில் உள்ளது.