வெங்கட் பிரபு இயக்கத்தில் , சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாநாடு’.

இந்தப் படம் நவம்பர் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அமெரிக்க விநியோக உரிமையை கிரேட் இந்தியா ஃபிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‘மாநாடு’ திரைப்படம் அமெரிக்காவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வெளியாகவுள்ளது.

இந்நிறுவனம் ‘பாகுபலி 2′ உள்ளிட்ட பல்வேறு இந்தியத் திரைப்படங்களை அமெரிக்காவில் வெளியிட்டுள்ளது. தற்போது பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்தின் அமெரிக்க விநியோக உரிமையையும் இந்நிறுவனம் கைப்பற்றியுள்ளது.