
கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ரஷ்மிகா மந்தனா பலருக்கும் பிடித்தவராக இருக்கிறார். இந்நிலையில் அவர் காதல் மற்றும் ஆண்களிடம் பிடிக்காத விஷயம் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.
காதலுக்கு வயது முக்கியம் இல்லை. என்னை விட சிறியவரை காதலிப்பதில் பிரச்சனை இல்லை. நாம் காதலிக்கும் நபர் நம்மை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும். நம்மை மாற்ற முயற்சி செய்யக் கூடாது என்றார்.
ஆண்கள் சட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிடுவது எனக்கு பிடிக்காது. ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்வது, உடம்பை ஃபிட்டாக வைத்திருப்பதை நான் பாராட்டுகிறேன். ஆனால் சட்டையில்லாமல் புகைப்படம் எடுத்து ப்ரொஃபைல் பிக்சராக வைப்பது தான் பிடிக்கவில்லை என்று ரஷ்மிகா மேலும் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel