கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், கடந்த மாதம் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள், திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் மற்றும் சமூக வலைத்தள பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.

இவரது உடல் ஞாயிற்றுக்கிழமை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் புனீத் ராஜ்குமாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரு யானைக் குட்டிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கர்நாடகத்தின் ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள சக்ரேபைலு யானைகள் முகாமில் உள்ள ஒரு யானைக் குட்டிக்கு மறைந்த நடிகர் புனீத் ராஜ்குமார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தனது மரணத்திற்கு முன்பு கடந்த அக்டோபர் மாதம் வனத்துறை சார்பில் எடுக்கப்பட்ட டாக்குமென்டரியில் நடிப்பதற்காக அவர் அங்கு சென்று 2 நாட்கள் தங்கியிருந்தார்.