வடோதரா
வடோதரா மாநகராட்சி நிர்வாகம் அசைவ உணவுகள், இறைச்சிகளைக் காட்சிப்படுத்த தடை விதித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் வடோதரா முனிசிபல் மாநகராட்சி நவம்பர் 11 ஆம் தேதி அன்று ஒரு வாய்மொழி உத்தரவை வெளியிட்டுள்ளது. அதன்படி உணவுக் கடைகளில் பொதுவாகக் காட்சிக்கு வைத்திருக்கும் முட்டை உட்பட அசைவ உணவுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று வாய்மொழி உத்தரவினை வழங்கியது.
வடோதரா மாநகராட்சி நிலைக்குழு தலைவர் ஹிதேந்திர படேல், “அனைத்து உணவுக் கடைகளும், குறிப்பாக மீன், இறைச்சி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவுகளை விற்கும் கடைகள், சுகாதார காரணங்களுக்காக உணவு நன்கு மூடப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் முக்கிய சாலைகளில் இருந்து பொதுவாகக் காட்சிப்படுத்தப்படுவதிலிருந்து அகற்றப்பட வேண்டும். தவிர மத உணர்வுகளைப் புண்படுத்தக்கூடாது என்பதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
ராஜ்கோட் மேயர் பிரதீப் டேவ், “இந்த கடைகளை பெரும்பாலான மக்கள் கடந்து செல்லும்போது அதன் வாசனையால் வெறுப்பு உணர்வை அடைகிறார்கள், மேலும் பலர் கோழியை வெளியே தொங்கவிடுகிறார்கள். விற்பனையாளர்கள் 15 நாட்களுக்குள் வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும், இல்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
[youtube-feed feed=1]