
தனுஷ் பிறந்தநாள்
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் தனுஷ் நடித்த முதல் திரைப்படம், “துள்ளுவதோ இளமை.” இவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தல் வெளியான இந்த திரைப்படம் கடும் விமர்சனத்துக்கு ஆளானது.ஆடுகளம் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக 2011ல் சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றார். 3 என்ற தமிழ் திரைப்படத்திற்காக 2011 ஆம் ஆண்டு இறுதியில் இவர் பாடிய வொய் திஸ் கொலவெறி டி என்ற பாடல் யூடியூப்இணையதளத்தில் வெளியாகி சில மணி நேரங்களிலேயே மிக அதிகம் பேரால் பார்வையிடப்பட்டதால் ஓரிரு நாட்களில் தேசிய அளவில் பேசப்பட்டார்.

பி.நாகிரெட்டி நினைவு நாள் (2004)
திரைப்படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், தொழிலதிபர், சமூக சேவகர் என்று பன்முகம் கொண்ட நாகிரெட்டி, ஆரம்பத்தில். வெங்காய ஏற்றுமதியாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னாளில் தென்கிழக்கு ஆசியாவிலேயே பிரமாண்டமான விஜயா- வாகினி ஸ்டூடியோவை உருவாக்கினார். பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, எங்கவீட்டுப்பிள்ளை உள்பட 50 வெற்றிப் படங்களைத் தயாரித்தார். .
குழந்தைகளுக்காக தெலுங்கில் ‘சந்தமாமா’ என்ற சிறுவர் இதழைத் தொடங்கினார். இது பின்னர் ‘அம்புலிமாமா’ என்ற பெயரில் தமிழில் வெளியிடப்பட்டது. அது வெற்றியடையவே, பல்வேறு மொழிகளிலும் வெளியாயிற்று.
Patrikai.com official YouTube Channel